"கோவையில் எளிமையான பின்னணியில் தொடங்கி 18 காப்புரிமைகளைப் பெற்ற சாதனையாளரின் கதை"

கோவை : கோவையில் பிறந்த திருமலைசுவாமி இளங்கோ, சூலூரை சேர்ந்த தலைமையாசிரியர் ஈ.பி திருமலைசுமாமி மற்றும் எம்.கே சரஸ்வதி ஆகியோருக்கு 1959ம் ஆண்டு ஐயர் மருத்துவமனையில் பிறந்தார்.


கோவை : கோவையில் பிறந்த திருமலைசுவாமி இளங்கோ, சூலூரை சேர்ந்த தலைமையாசிரியர் ஈ.பி திருமலைசுமாமி மற்றும் எம்.கே சரஸ்வதி ஆகியோருக்கு 1959ம் ஆண்டு ஐயர் மருத்துவமனையில் பிறந்தார். 

எல்லா கதைகளை போல இந்த கதையிலும் சாதனையாளர் பல தடைகளை தாண்டி வெற்றியை கைப்பற்றியவர் தான். இவரின் வெற்றிக்கு பின்னிருப்பவர் அவருடைய பாட்டி மீனாட்சி. தன்னுடைய 17 வயதிலே கணவரை இழந்த இவர் தனியாளாக குடும்பத்தை பேணி வந்திருக்கிறார். 

அதோடு திருமலைசுவாமி இளங்கோவின் தந்தையை வெள்ளலூரின் முதல் பட்டதாரியாக உருவாக்கியுள்ளார். மேலும், அவருடைய தந்தைதான் அந்த பகுதியின் முதல் தலைமையாசிரியரும் கூட என பெருமிதம் பொங்க கூறுகிறார், இளங்கோ. 



பாட்டியின்  à®’ரே வருமானம் அவருடைய மாடு தான். வருடங்கள் கடந்து செல்லும் போது, வீடுகளுக்கு பால் கொண்டு சென்று விற்க தொடங்கினார். தினமும் தவறாமல் அதிகாலை 4 மணிக்கெல்லாம் விமானத்துறை அதிகாரி வீடுகளுக்கெல்லாம் பால் கொடுக்க சென்றுவிடுவார்.



என்னுடைய பாட்டியின் நேரம் தவறாமை மற்றும் நேர்மை அந்த அதிகாரியை கவர்ந்துவிட்டது. அவர் தான் எனக்கும், என்னுடைய உடன்பிறந்த நால்வருக்கும் கேந்திரிய வித்யாலாவில் சேர்க்க உதவினார். 

என் சகோதர்கள் அருள்மொழி, பாரதி, என் சகோதரிகள் சுகந்தி, திலகவதி மற்றும் என்னையும் சேர்த்து எங்கள் ஐந்து பேருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க காரணமே என் பாட்டிதான். நாங்கள் கேந்திரிய வித்யாலாவில் படித்ததன் பயனாகதான் ஐஐடி பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களாக உயர்ந்து நிற்கிறோம், என்றார். 



தொடர்ந்து பேசிய அவர், "முழுக்க கல்வித்தொகையின் உதவியோடு சுரங்க பொறியியலில் பிரிவில் எனது இளங்கலை தொழில்நுட்ப படிப்பை ஐ.ஐ.டி வாரணாசியில் 5 வருடங்களாக பயின்றேன். அதன் பிறகு ஒருவருடம் பெங்களுர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் மேலாண்மை திட்டம் பற்றி கற்று தேர்ந்தேன். 

இதனுடைய முதுகலை தொடர்ச்சியாக, சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலையில் சேர்ந்தேன். அமெரிக்காவில், என்னுடைய மாணவ பருவத்தில் வாரமொன்றுக்கு 20 மணி நேரம் வகுப்பெடுப்பேன். படிப்பை முடித்ததும் ஏடி & டி.,யில் 1987ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தேன். கிட்டத்தட்ட 25 வருடங்களாக அங்கு பணியாற்றினேன். தோராயமாக, 18 காப்புரிமைகளை அந்த நேரத்தில் நான் பெற்றேன். 



இளங்கோ, மதுரையை சேர்ந்த அனிதாவை 1987ம் ஆண்டு, தாரா மற்றும் ராகுலின் ஆசீர்வாதத்துடன் மணந்து கொண்டார். "நான் தற்போது தனியனாகதான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு சில வருடங்களுக்கு முன்பாக பக்கவாதம் வந்தது நிலையில், இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தேன். உண்மையில் என்னுடைய குடும்பத்தை அதிகம் தேடுகிறேன். 



என்ன இருந்த போதும், என்னுடைய சொந்த ஊரை நான் விரும்புகிறேன். என்னுடைய குறிக்கோளை வரையறுத்துள்ளேன். இந்தியாவில் உள்ள இளைஞர்களை ஈர்க்க அதிக விரும்புகிறேன். அவர்களை தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் புதுமையாக சிந்திக்கும் வகையில் உருவாக்க ஆர்வமாக இருக்கிறேன். 



சமீபத்தில் கூட, ஐஐடி மும்பை, ஐஐடி வாரணாசி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களில் பயிற்சி பட்டறைகளை நடத்தினேன். இந்தியாவின் அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் கார்பரேட் நிறுவனங்களில் கருத்தரங்கு, பயிற்சி வகுப்புகளை எடுக்க ஆர்வமாக இருக்கிறேன். 

பொருளாதார அளவில் பின்தங்கியிருக்கும் மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வழிகாட்டுதலுக்கு என்னை எப்போதும் வேண்டுமானாலும் அணுகலாம். எவ்வித கட்டணமும் இன்றி அவர்களுக்கு கற்றுத்தர விரும்புகிறேன்," என்கிறார் இளங்கோ. 

இந்நாட்களில், அவருக்கு ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதுவதும், பயணம் மேற்கொள்வதும், படங்களுக்கு திரைக்கதை எழுதுவதுமே பொழுது போக்கென சிரித்துக் கொண்டே சொல்கிறார். வீல் சேருடன் பிணைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கையை, கால்களுடன் தொடர விரும்பும் இளங்கோ எல்லாருடைய பிரார்த்தனைகளிலும் அதனை கேட்கிறார். இவை பிரதோசம் பூஜையில் பங்கேற்ற பின் அவர் கூறியதாகும். 



அருடைய காப்பீடு உரிமைகளை 1987ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுக்குள் பெற்றிருக்கிறார். டெலிபோனி, இன்டர்நெட், மற்றும் மென்பொருள் என பல்வேறு துறைகளில் 18 காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறார். இது போன்ற சாதனைகளுக்கு, புதுமையான சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புக்கும் அவர் முக்கியத்துவம் தந்ததே காரணம் என்கிறார். காப்பீடு என்பது ஒருவரின் தனித்துவமான கண்டுபிடிப்பு, ஐடியா, புத்தகங்கள் போன்றவற்றினுடைய தனி உரிமம் தான் காப்புரிமையாகும். 

இளங்கோ பேசுகையில், "நான் பெற்றோர் மற்றும் குழந்தைகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். அதில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் நேர்மறையாக இருத்தல் அவசியம். மற்றவர்களுக்கு உதவ வேண்டும். எப்போதும் உங்கள் அறிவு மற்றும் செல்வத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். என்னைப் போல பயணம் மேற்கொள்ளுங்கள். நான் இதுவரையிலும், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள 70 சதவீதம் மாநிலங்களுக்கு சென்றுவந்துவிட்டேன். உலக நாடுகளில் பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன், என்றார். 

இளங்கோவிற்கு ஆன்மிகத்தில் அதீத ஆர்வம். ஆகையால் அது தொடர்பான பயணங்கள், பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். தற்போது, இளைஞர்களைத் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் புதிய செயல்திறனை வளர்த்துக் கொள்ள சொல்லி அறிவுறுத்துகிறார். எப்போதும் இளைஞர்களை வழிநடத்த தயாராக இருக்கும் இவரை தொடர்பு கொள்ள அணுகவும் [email protected].

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...